மாண்புமிகு அமைச்சரின் செய்தி

மாண்புமிகு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் செய்தி

சர்வதேச தொழிலாளர் சந்தைக்கு திறன்மிக்க மனித வளத்தை வழங்குவதில் இலங்கையை உலகின் சிறந்த நாடாக மாற்றுவதற்கு எனது அமைச்சின் கீழ் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை வழிநடத்துவதே எனது நோக்கமாகும். நாட்டுப் பொருளாதாரத்தில் அந்நியச் செலாவணியை அனுப்புவதில் இலங்கைச் சமூகம் முன்னனியில் உள்ளது. அவர்களுக்காக அரச மட்டத்தில் செயல்படுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையூம் நாம் எடுப்போம் என்பதை குறிப்பிட்டுக் கூறுகிறேன். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இலங்கைக்கு கொண்டு வரும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்களின் சேவைகளைப் பாராட்டுவதற்கும் தொழில் விருத்தியை மேம்படுத்தவூம் நடவடிக்கை எடுத்து வருகிறௌம். தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யூம் வெளிநாட்டு நாடுகளுடன் இராஜாந்திர மட்டத்தில் புரிந்துணர்வூ உறவைப் பேண முடிந்தது. இதன்விளைவாக இலங்கையில் அதிகளவான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் திறக்கப்பட்டுள்ளன.வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதுடன் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவூம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்ட ஆண்டாக 2022 விளங்குகிறது. புலம்பெயர்ந்த சமூகத்தை சார்ந்தவர்களுக்காக பல நலன்புரித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவூம்¸ கண்ணியத்தை உருவாக்கவூம்இ சமூக மனப்பான்மை மாற்றத்தை உருவாக்குவதற்கும் இது எமக்குக் கிடைத்த வெற்றியாகும். மக்களுக்கு நெருக்கமான மற்றும் பயனள்ள சேவையை வழங்கும் அமைச்சுகளுக்கிடையில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினை நியமிப்பதற்கான செயல்பாட்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பெற்றுள்ள மகத்தான ஆதரவை நான் பாராட்டுகிறேன். இலங்கை தேசம் என்ற வகையில்இ சீரற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பங்களிப்புச் செய்யூம் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறௌம்.

கௌரவ. மனுஷ நாணயக்கார, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

கௌரவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் செய்தி

நம் நாடு தற்போது எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடியிலிருந்து விடுபட, அந்நியச் செலாவணியைக் கொண்டுவருவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து சட்டப்பூர்வ வழிகளில் நாடு பெறும் வெளிநாட்டுப் பணம். வெளிநாட்டு வேலைவாய்ப்பின் அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் முன்னேற்றம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அமைச்சுடன் இணைந்து பாரியளவிலான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விழிப்புணர்வு, சுயதொழில் மற்றும் மறு ஒருங்கிணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களில், உழைக்கும் குடும்பங்களின் குழந்தைகளுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்குதல், பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கல்விக்கான புலமைப்பரிசில்கள் வழங்குதல், தொழில்முறை பயிற்சி வாய்ப்புகளுக்கான பரிந்துரைத் திட்டங்கள் செயல்படுகின்றன, மேலும் இந்தத் திட்டங்கள் தரை மட்டத்திலும் மாவட்ட மற்றும் பிராந்திய செயலக மட்டங்களிலும் கொண்டு செல்லப்படுகின்றன. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து பணியாற்றும் செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டங்களை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள மட்டத்தில் முன்னெடுப்பதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் எதிர்காலத்தில் வெற்றியடைவதற்கு தேவையான ஆதரவையும் யோசனைகளையும் மாகாண மட்டத்தில் பெறுவதற்கும், செயல்திறன் மீளாய்வு கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனது தலைமையின் கீழ் மாகாண மட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக.

கௌரவ. ஜகத் புஷ்பகுமார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

அமைச்சகத்தின் தொடர்பு விவரங்கள்

#தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, 6வது மாடி, மெஹேவர பியச, நாரஹேன்பிட்ட, கொழும்பு 05, இலங்கை.
info@labourmin.gov.lk
TA