முறைப்பாட்டு முகாமைத்துவம்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் திருப்தியை உறுதிசெய்வதில் பணியகத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கின்றது மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவூம் தேவைப்படும் போது உதவியை நாடவூம் அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியகமானது குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் சரியான நேரத்தில் பொருத்தமான தீர்வூகளை வழங்குவதற்கும் ஒரு விஷேட முறைப்பாட்டுப் பிரிவூ நிறுவப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற ஊழியர்கள் முறைப்பாடு ஏற்றல், ஆவயப்படுத்தல், விசாரணை மற்றும் தீர்வூ வழங்கல் போன்றவற்றை கையாளுகின்றனர். இது தொடர்பான அறிவூ மற்றும் சட்ட திட்ட ஒழுங்குமுறைகள் பற்றிய புரிதல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

பணியகத்தின் இணங்கல் பிரிவானது அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தொழிலாளர் பிரிவூகள் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து அல்லது அவர்கள் சார்பான ஒருவரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும். பதிவூ செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளி அல்லது அவர்கள் சார்பான ஒருவர் பணியக தலைமைக் காரியாலயம் அல்லது உள்ளுர் கிளை அலுவலகம் அல்லது அந்தந்த நாட்டிலுள்ள தூதரகத்தின் தொழிலாளர் பிரிவில் முறைப்பாடு செய்யலாம். இங்கு பணியக அலுவலகங்களில் நேரடியாக முறைப்பாடு சமர்ப்பித்தல்இ பிரத்தியேக முறைப்பாட்டு துரித அழைப்புகள்இ மின்னஞ்சல் தொடர்பு மற்றும் நிகழ்நிலை முறைப்பாடு சமர்ப்பித்தல் போன்றவை உள்ளடங்கும். புல்வேறு சலுகைகள் வழங்குவதன் மூலம் முறைப்பாட்டாளர்களுக்கான அணுகல் வசதியை பணியகம் வழங்குகின்றது.

 

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், தொடர்புடைய உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவூகளில் இணங்கற் பிரிவூ / அலகு அல்லது தொழிலாளர் பிரிவூகளுடன் இணைக்கப்பட்டுள்ள பணியகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் அந்த முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கான திறனை மேம்படுத்த அணைய அடிப்படையிலான முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு இயங்குகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம், சம்பந்தப்பட்ட தரப்பினர் போன்றௌர் ஊஆளு இல் தகவல் தொடர்பு கொள்ளவூம், பதிவூ செய்யவூம் வசதி செய்யப்பட்டுள்ளது. பணியகமானது முறைப்பாட்டின் சிக்கல் தன்மையைக் கருத்திற் கொண்டு முறைப்பாடுகளை உடனடியாகத் தீரக்க முயற்சிக்கிறது. அவர்கள் முறைப்பாட்டாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தன்மைஇ எதிர்பார்க்கப்படும் தீர்வூ காலவரையறை பற்றிய தகவல்களை ஊஆளு இல் பதிவேற்றுகின்றனர்.

 

முறைப்பாட்டாளர்களின் அவசர அல்லது அதிக முன்னுரிமை அளிக்கக் கூடிய முறைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. முறைப்பாடுகளை திறம்படத் தீர்ப்பதற்கு தொடர்புடைய தரப்பினருடன் நெருக்கமான ஒத்துழைப்பையூம் ஒருங்கிணைப்பையூம் பேணுகிறது. அதாவது முறைப்பாட்டின் தன்மையைப் பொறுத்து ஆட்சேர்ப்பு முகவர் நிலையம், தூதரகங்கள், வெளிநாட்டு முதலாளி அல்லது பிற அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்கிறது. இங்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தீர்வூ செயல்பாட்டில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. முறைப்பாடு நிரூபிக்கப்பட்டவூடன் சிக்கலைத் தீர்க்க பணியகமானது தகுந்த தீர்வூ நடவடிக்கைகளை எடுக்கிறது. மேலும்இ நிதி இழப்பீடு வழங்குதல், சட்ட உதவிஇ மருத்துவ எதவி, நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் அல்லது முதலாளி அல்லது தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வசதி செய்தல் போன்றவை உள்ளடங்கும். இதன் மூலம் முறைப்பாட்டாளர் முழு திருப்தியைப் nhபறுவதை உறுதி செய்கிறது.

Special Note:

If The Employee Is Not Register In The SLBFE You Not Entitle To Submit Complaint/ Request At The SLBFE. But The Complainant Could Be Submitted To The Consular Division Of The Sri Lanka Ministry Foreign Affairs.

TA