புதிய/புதுப்பித்தல் பதிவு

பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (புதிய/புதுப்பித்தல்)

 

முதன்முறையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் தேவைகள் (புதிய பதிவு):

 

 • தொடர்புடைய வரம்புகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
 • பாஸ்போர்ட் (பணியகத்தில் பதிவு செய்ததில் இருந்து 06 மாதங்கள் வரை செல்லுபடியாகும்)
 • செல்லுபடியாகும் விசா அல்லது நுழைவு அனுமதி
 • சேவை ஒப்பந்தம்
 • வெளிநாட்டு அனுபவம்/ உள்ளூர் அனுபவம்/ நிறுவனப் பயிற்சி/ தொழில்முறை சான்றிதழ்/ பணியக பயிற்சி
 • குடும்பப் பின்னணி அறிக்கை (45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு)
 • இன்சூரன்ஸ் சான்றிதழ் (ஜோர்டான் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைச் சமர்ப்பிக்க வேண்டும்)

 

முதல் முறை பதிவு

 

முதன்முறையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம்

 

தொடக்கப் பதிவுக் கட்டணம் ரூ. 22,027 / = (18,200 + 18% (VAT)  +2.5%(SSCL))

 

மேற்கண்ட கட்டணங்கள் இதற்கு பொருந்தும்;:

 

 • முதல் முறையாக பதிவு செய்யும் போது
 • கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட வேலையளிப்பவர் அல்லாத வேறொரு முதலாளியிடம் வெளிநாடு செல்லும்போது. (மீண்டும் நுழைவு விசா)
 • சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதுஇ வேலை விசாவைப் பெற்று மீண்டும் நுழைவு விசா மூலம் இலங்கை திரும்பும்போது.

 

பணியகத்தில் பதிவு புதுப்பித்தல்

 

உங்கள் பணியக பதிவை புதுப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் தேவைகள்

 

 • பாஸ்போர்ட் (பதிவு செய்த நாளிலிருந்து 06 மாதங்களுக்கு செல்லுபடியாகும்)
 • மறு நுழைவு விசா
 • முன் பதிவு விசா
 • பணியமர்த்துபவர் மறு நுழைவு விசாவைச் சரிபார்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பணியகப் பதிவைப் பெற்ற நாளிலிருந்து அதே முதலாளியின் கீழ் பணிபுரிவதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

(சவூதி அரேபியாவிற்கான பதிவைப் புதுப்பிக்கும்போது தயவுசெய்து இகாமா அட்டை அல்லது அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.)

 

Registration renewal fee is Rs.4,599 / = (Rs.3,800 +18% (VAT)+2.5(SSCL) )

 

 • கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட முதலாளியிடம் மீண்டும் நுழைவு விசாவில் வெளிநாடு செல்லும்போது
 • கடைசியாகப் பதிவு செய்த முதலாளியின் கீழ் வேறொரு நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் போது
 • கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட வேலையளிப்பவரிடமிருந்து புதிய விசாஃ வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற்றவுடன் (கடைசிப் பதிவுக்குப் பிறகு வேலையளிப்பவர் அல்லாதவர் வேறொரு முதலாளியிடம் வெளிநாடு சென்றிருக்கக் கூடாது)

நிகழ்நிலை பதிவு

நீங்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்கிறீர்கள் என்றால் நிகழ்நிலை மூலம் பணியக பதிவுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது மற்றும் கட்டணத்தை நிகழ்நிலையில் செலுத்தலாம். முதல் முறையாக பதிவு செய்வதற்கும்இ பதிவை புதுப்பிப்பதற்கும் நிகழ்நிலையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

 

பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பணியக பதிவுக்காக பணியக தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்குச் செல்லும்போது அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் முறை பதிவு செய்தல் மற்றும் பதிவை புதுப்பித்தல்

 

 • கடவுச்சீட்டின் படம் (பணியகத்தில் பதிவு செய்த நாளிலிருந்து 06 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்)
 • தேசிய அடையாள அட்டையின் படம் (முன் பக்கமும் பின் பக்கமும்)
 • செல்லுபடியாகும் விசா அல்லது நுழைவு அனுமதி
 • சேவை ஒப்பந்தம்
 • வெளிநாட்டு அனுபவம்/ உள்ளூர் அனுபவம்/ நிறுவனப் பயிற்சி/ தொழில்முறை சான்றிதழ்/ பணியக பயிற்சி
 • குடும்பப் பின்னணி அறிக்கை (45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு)
 • இன்சூரன்ஸ் சான்றிதழ் (ஜோர்டான் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைச் சமர்ப்பிக்க வேண்டும்)

புதிய/ புதுப்பிப்பு பதிவுக்காக தூதரகத்திற்குச் செல்லவும்

பணியகம் பதிவை புதுப்பிக்கும் போது அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் இருந்து பணியமர்த்துபவர் மாற்றத்தின் போது பதிவைப் பெறலாம்.

 

பணியகப் பதிவைப் பெற்றதிலிருந்து ஒரே முதலாளியின் கீழ் பணிபுரிந்தால் அது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் உங்களின் முந்தைய வேலை ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிட்டால் அல்லது பணியமர்த்துபவர் மாறிய எந்த நாளிலும் பணியகப் பதிவின் 2 வருட செல்லுபடியும் செல்லாது. புதிய முதலாளியின் கீழ் புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் நுழையும் நேரத்தில் ஆரம்ப பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி பணியகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

அடுத்த உறவினர் (NOK) மூலம் புதுப்பித்தல்

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தலைமை அலுவலகம் அல்லது பணியகத்தின் கிளை அலுவலகத்திற்குச் சென்று உங்கள் பதிவைப் புதுப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் செல்லுபடியாகும் விசாவின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் நகல் ஆகும்.

TA