தலைவரின் செய்தி

தலைவரின் செய்தி

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கையின் வெளிநாட்டு வேலைத் தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பான அரச நிறுவனம் என்ற வகையில், பாதுகாப்பான ஒழுங்கான மற்றும் வழமையான குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதோடு, இடம்பெயர்வு மற்றும் அபிவிருத்தியையும் இணைப்பதில் எங்களின் கவனம் எப்போதும் இருந்து வருகிறது. இருப்பினும் மாறிவரும் காலங்களுக்கு ஏற்பල நிலையான நடைமுறைகளிலிருந்து திசை திருப்புவதும். எல்லைகளுக்கு அப்பால் சிந்தித்து புதிய தரங்களை அமைப்பதும் முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானதாக உள்ளதுග பொறிமுறைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புகளை உருவாக்குவதன் மூலம்ල பலதரப்பு அல்லது இருதரப்பு உரையாடல்களில் ஈடுபடுவதன் மூலமும்ල பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் கூட்டுத் திட்டங்களுக்கு விரைவாகச் செயல்படுவதன் மூலமும் நாங்கள் அவ்வாறு செய்ய உறுதி பூண்டுள்ளோம். எங்கள் பங்குதாரர்கள் அனைவருடனும் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர எதிர்பார்க்கிறோம். இது தொழில்துறையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணத்தை எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு ஆதாய அனுபவமாக மாற்றவும் முடியும்.

ஏ.ஏ.எம். ஹில்மே

TA