பெற்ற வெளிநாட்டு வேலைக்கு பதிவு செய்வது எப்படி

சுயமாக (தனிப்பட்ட முறையில்‌) வெளிநாடு செல்லும்‌ இலங்கையர்களை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்யும்‌ போது நீங்கள்‌ தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்‌

இலங்கை சனநாயக சோசலிசக்‌ குடியரசின்‌ பாராளுமன்றத்தால்‌ நிறைவேற்றப்பட்ட 1994 ஆம்‌ ஆண்டின்‌ 4மற்றும்‌ 2009 ஆம்‌ ஆண்டின்‌ 56 அம்‌ இலக்க சட்டங்கள்‌ மூலம்‌ திருத்தப்பட்ட 1985 ஆம்‌ ஆண்டின்‌ 21 ஆம்‌ இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகச்‌ சட்டத்தின்‌ 53 (3) பிரிவின்படி இலங்கைக்கு வெளியில்‌ வேலைக்காக செல்லும்‌ ஒவ்வொரு இலங்கையரும்‌ வெளியேறும்‌ முன்‌ பணியகத்தில்‌ பதிவு செய்து கொள்ள வேண்டும்‌. நீங்கள்‌ சுயமாக வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்கிறீர்கள்‌ என்றால்‌, ஆன்லைன்‌ முறை மூலம்‌ பணியகப்‌ பதிவைப்‌ பெற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

நீங்கள்‌ முதல்‌ தடவையாக வேலைக்காக வெளிநாடு செல்லும்‌ போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்‌ மற்றும்‌ தகைமைகள்‌.

  • குறிப்பிட்ட வயதெல்லைகள்‌ பூர்த்தி செய்யப்பட வேண்டும்‌.
  • பாஸ்போர்ட் (பணியகத்தில் பதிவு செய்ததில் இருந்து 06 மாதங்கள் வரை செல்லுபடியாகும்)
  • செல்லுபடியாகும் விசா அல்லது நுழைவு அனுமதி
  • சேவை ஒப்பந்தம்
  • வெளிநாட்டு அனுபவம்/ உள்ளூர் அனுபவம்/ நிறுவனப் பயிற்சி/ தொழில்முறை சான்றிதழ்/ பணியக பயிற்சி
  • குடும்பப் பின்னணி அறிக்கை (45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு)

வேலைக்காக வெளிநாட்டிற்குச்‌ செல்லும்‌ போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்வதற்கு நீங்கள்‌ பூர்த்தி செய்ய வேண்டிய குறைந்தபட்ச வயதெல்லை.

வயது வரம்புகள்:

  •  அனைத்து நாடுகளுக்கும் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

வீட்டு வேலைக்காக வெளியூர் செல்ல ஒரு பெண்

  • சவுதி அரேபியாவிற்கு 25 வயது இருக்க வேண்டும்
  • மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மற்ற நாடுகளுக்கு 23 வயது இருக்க வேண்டும்
  • மத்திய கிழக்கு அல்லாத நாடுகளுக்கு 21 வயது இருக்க வேண்டும்

நீங்கள்‌ வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும்‌ போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்‌ பதிவு செய்வதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய வெளிநாட்டு அல்லது உள்ளுர்‌ அனுபவம்‌

  • வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும்‌ பெண்‌ 150 நாட்கள்‌ வெளிநாட்டு ௮னுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. (இதை 3 பயணங்களில்‌ பூர்த்தி செய்யலாம்‌)
  • ஒரு ஆண்‌ தொழிலாளி வீட்டு வேலைக்காக அல்லது வீட்டு வேலை அல்லாத வேலைக்காக ஒரு பெண்‌ஃஆண்‌ தொழிலாளி வெளிநாடு செல்வதாயின் 30 நாட்கள்‌ வெளிநாட்டு அனுபவம்‌ தேவை. (இது ஒரு பயணத்தில்‌ பூர்த்தி செய்யப்பட வேண்டும்‌.)

நீங்கள்‌ ஒரு திறன்‌ தொழிலாளியாக அல்லது தொழில்முறை மட்டத்தில்‌ வேலைக்குச்‌ செல்கிறீர்கள்‌ என்றால்‌இ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பணி அனுபவச்‌ சான்றிதழை (6 மாதங்களுக்குக்‌ குறையாத சேவை) அல்லது தொழில்‌ தகுதிச்‌ சான்றிதழ்கள்‌ / பட்டப்படிப்புச்‌ சான்றிதழ்கள்‌ / டிப்ளோமா சான்றிதழ்களைச்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும்‌ போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்வதற்கு போதுமான வெளிநாட்டு/உள்ளுர்‌ அனுபவம்‌ இல்லாதவர்களுக்கு பணியகத்தில்‌ இருந்து பயிற்சி வகுப்புகள்‌ வழங்கப்படும்‌

  • வீட்டுப்‌ பராமரிப்பு உதவியாளர்களுக்கான பயிற்சி - 15 நாட்கள்‌ (செயல்முறை பயிற்சியுடன்‌)
  • நிறுவனங்கள்‌ மற்றும்‌ தொழில்துறை வேலைகளுக்கு - 2 நாட்கள்‌ (இந்தப்‌ பயிற்சி வெளிநாட்டில்‌ வீட்டு வேலைக்குச்‌ செல்லும்‌ ஆண்‌ மற்றும்‌ வீட்டு வேலை அல்லாத வேலைக்காக செல்லும்‌ பெண்‌/ஆண்‌ இருபாலருக்குமானது.
  • சைப்ரஸில்‌ வீட்டுத்‌ தாதியர்‌ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்‌ ஆண்‌ தொழிலாளர்கள்‌ தாதியர்‌ பணியில்‌ 6 மாதங்களுக்கு மேல்‌ அனுபவம்‌ பெற்றிருந்தால்‌, 2 நாள்‌ வீட்டு வேலை அல்லாத பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்‌.
  • புயி குடைடiபெ பாடநெறி (வீட்டு உதவியாளர்‌ பாடநெறியை முடித்த ஒருவர்‌) பிறகு வெளிநாடு செல்லும்‌ போது (மத்திய கிழக்கு / மத்திய கிழக்கு அல்லாத ) பிராந்திய நாடொன்றிக்குச்‌ செல்வதாயின்‌ இப்பயிற்சியைப்‌ பெற முடியும்‌.
  • தாதியர்‌ பாடநெறி - 30 நாடகள்‌ (செயல்முறை பயிற்சியுடன்‌)
  • வீட்டு வேலைக்கான பயிற்சி வகுப்பு - 7 நாட்கள்‌ (வெளிநாட்டில்‌ முந்தைய அனுபவத்தை ஆவணங்கள்‌ மூலம்‌ சரிபார்க்க முடியாத மற்றும்‌ பயிற்சி சான்றிதழ்‌ காலம்‌ 10 ஆண்டுகளுக்கு மேல்‌ உள்ள பணிப்பென்கள்‌ இப்பயிற்சியைப்பெற்றுக்கொள்ள முடியும்‌
  • நீங்கள்‌ ஒரு திறன்‌ தொழிலாளியாக அல்லது தொழில்முறை மட்டத்தில்‌ வேலைக்குச்‌ செல்கிறீர்கள்‌ என்றால்‌இ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பணி அனுபவச்‌ சான்றிதழை (6 மாதங்களுக்குக்‌ குறையாத சேவை) அல்லது தொழில்‌ தகுதிச்‌ சான்றிதழ்கள்‌ / பட்டப்படிப்புச்‌ சான்றிதழ்கள்‌ / டிப்ளமோ சான்றிதழ்களைச்‌ சமர்ப்பிக்க முடியும்‌.)

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும்‌ போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்வதற்கு நீங்கள்‌ சமர்ப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்பு ஒப்பந்தம்‌

  • வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும்‌ ஆண்கள்‌ஃபெண்களின்‌ சேவை ஒப்பந்தம்‌ இலங்கை தூதரகத்தால்‌ அங்கீகாரப்பட வேண்டும்‌. (கட்டார்‌, குவைட்‌, ஓமன்‌, பஹ்ரைன்‌, ஜோர்டான்‌, லெபனான்‌, சவுதி அரேபியா, இஸ்ரேல்‌, சைப்ரஸ்‌, மலேசியா, மாலைதீவு, சிங்கப்பூர்‌ மற்றும்‌ தென்‌ கொரியா)
  • வீட்டு வேலை அல்லாத பயிற்றப்பட்ட பெண்‌ தொழிலாளியாக குவைட் நாட்டுக்கு செல்கிறார்‌ என்றால்‌, குவைட்டில்‌ உள்ள இலங்கைத்‌ தூதரகத்தினாலோ அல்லது வர்த்தகச்‌ சபையினாலோ வேலைவாய்ப்பு ஒப்பந்தம்‌ அங்கீகரிக்கப்பட வேண்டும்‌.
  • மத்திய கிழக்கில்‌ வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும்‌ பெண்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும்‌ நலன்புரி செயல்படும்‌ இலங்கைத்‌ தூதரகங்களில்‌ தொழில்‌ வழங்குனர்‌ 1,500 டொலர்களை திருப்பிச்‌ செலுத்த முடியாத பாதுகாப்பு வைப்புத்‌ தொகையாகச்‌ செலுத்த வேண்டும்‌.
  • இலங்கைத்‌ தூதரகத்தின்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ நலன்புரி பிரிவுகள்‌ செயற்படாத அனைத்து நாடுகளுக்கும்‌ மற்றும்‌ ஐக்கிய அரபு இராச்சியங்களுக்கும்‌, வீட்டு வேலைக்காக செல்லும்‌ ஆண்‌/பெண்‌ புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சேவை ஒப்பந்தக்கட்டணம்‌ (அமெரிக்க டாலர் 60 ) உள்நாட்டில்‌ செலுத்தப்பட வேண்டும்‌
  • குவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் ஒரு பெண் உள்நாட்டில் திறமையற்ற வேலைக்காக வெளிநாடு சென்றாலோ அல்லது ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்னாலோ, சேவை ஒப்பந்தக் கட்டணம் (அமெரிக்க டாலர் 42) உள்நாட்டில் செலுத்தப்பட வேண்டும். ஒரு ஆண்/பெண்ணுக்கான சேவை ஒப்பந்தக் கட்டணம் (அமெரிக்க டாலர் 42) ஒரு சுற்றுலா விசாவில் உள்நாட்டு வேலை விசாவுடன் வெளிநாடு சென்று ரீ-என்ட்ரி விசாவுடன் இலங்கைக்கு திரும்புதல் திறமையற்ற வேலை அல்லது ஆடைத் துறையில் வேலை செய்பவர்கள் சேவை ஒப்பந்தக் கட்டணத்தை (அமெரிக்க டாலர் 42) உள்நாட்டில் செலுத்த வேண்டும்.

வேலைக்காக வெளிநாடு செல்லும்‌ பெண்கள்‌, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்ய குடும்பப்‌ பின்னணி அறிக்கையைச்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

  • 45 வயதிற்குட்பட்ட பெண்கள்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ பிரதேசத்தின்‌ பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட குடும்பப்‌ பின்னனி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்‌. (இது வெளியிடப்பட்ட நாளிலிருந்து 9 மாதங்களுக்கு செல்லுபடியாகும்‌.)
  • நீங்கள்‌ பணியகத்தில்‌ பதிவுசெய்துஇ வெளிநாட்டில்‌ பணிபுரிந்து 6 மாதங்களுக்குள்‌ இலங்கைக்கு திரும்பி, புதிய விசா பெற்று மீண்டும்‌ வெளிநாடு செல்லவிருந்தால்‌, குடும்பப்‌ பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்கத்‌ தேவையில்லை.
  • சுற்றுலா விசாவுடன்‌ வெளிநாடு சென்று அந்த நாட்டில்‌ பணிபுரிந்து மீண்டும்‌ இலங்கைக்கு வந்து, மீள்நுழைவு அல்லது மறு நுழைவு விசாவுடன்‌ வெளிநாட்டிற்குத்‌ திரும்பிச்செல்வதானால்‌ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்ய குடும்பப்‌ பின்னணி அறிக்கை தேவையில்லை.
  • பிரதேச செயலகத்திலிருந்து குடும்பப்‌ பின்னணி அறிக்கையைப்‌ பெற்றுக்கொள்ளும்‌ நடைமுறைக்கு மாற்றீடாக, கிராம சேவையாளரிடமிருந்து பெறப்பட்ட வதிவிடச்‌ சான்றிதழ்‌, உறுதிமொழிப்‌ பத்திரம்‌இ தேசிய அடையாள அட்டை மற்றும்‌ கடவுச்சீட்டு அடங்கிய பக்கத்தை www.slbfe.lk இணையத்தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌. பணியகப்‌ பதிவைப்‌ பெறும்போது அசல்‌ பிரதிகள்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக உங்கள்‌ பதிவை புதுப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்‌

  • பாஸ்போர்ட் (பதிவு செய்த நாளிலிருந்து 06 மாதங்களுக்கு செல்லுபடியாகும்)
  • மறு நுழைவு விசா
  • முன் பதிவு விசா
  • பணியமர்த்துபவர் மறு நுழைவு விசாவைச் சரிபார்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பணியகப் பதிவைப் பெற்ற நாளிலிருந்து அதே முதலாளியின் கீழ் பணிபுரிவதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(சவூதி அரேபியாவிற்கான பதிவை புதுப்பிக்கும்‌ போது தயவுசெய்து இகாமா அட்டை அல்லது அதன்‌ பிரதியை சமர்ப்பிக்கவும்‌)

• when you go abroad for employment, fees that you should pay to register with the Sri Lanka Bureau of Foreign Employment

  The initial registration fee is Rs.22,027.00 -(Rs.18,200.00 + 18% (VAT) + 2.5%(SSCL) 

  • முதல் முறையாக பதிவு செய்யும் போது
  • கடைசியாகப்‌ பதிவுசெய்யப்பட்ட தொழில்‌ வழங்குனர்‌ அல்லாத வேறொரு தொழில்‌ வழங்குனரிடம்‌ வெளிநாடு செல்லும்‌ போது. (மீண்டும்‌ நுழைவு விசா)
  • When going abroad on a re-entry visa (went abroad on a tourist visa, then obtained a work visa and returning to Sri Lanka on a re-entry visa).

பதிவை புதுப்பித்தல்‌ கட்டணம்‌ ரூ.4,599.00 (ரூ.3,800.00 +18% (VAT)+2.5%(SSCL)

  • கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட முதலாளியிடம் மீண்டும் நுழைவு விசாவில் வெளிநாடு செல்லும்போது
  • கடைசியாகப் பதிவு செய்த முதலாளியின் கீழ் வேறொரு நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் போது

கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட வேலையளிப்பவரிடமிருந்து புதிய விசாஃ வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற்றவுடன் (கடைசிப் பதிவுக்குப் பிறகு வேலையளிப்பவர் அல்லாதவர் வேறொரு முதலாளியிடம் வெளிநாடு சென்றிருக்கக் கூடாது)

  • பதிவுசெய்த பிறகு வெளிநாடு செல்லாத பட்சத்தில்‌ பதிவுக்‌ கட்டணத்தைத்‌ திரும்பப்‌ பெற விரும்பினால்‌, காப்பீட்டுச்‌ சான்றிதழ்‌, வாடிக்கையாளர்‌ பற்றுச்சீட்டுப்‌ பிரதி, கடவுச்சீட்டு, வங்கிக்‌ கணக்கின்‌ பிரதி ஆகியவற்றுடன்‌ பணியகத்தின்‌ நிதிப்‌ பிரிவுக்கு கோரிக்கைக்‌ கடிதம்‌ அனுப்பப்பட வேண்டும்‌. பணியகத்துடன்‌ பதிவு செய்த நாளிலிருந்து 120 நாட்களுக்கு இது சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

பணியகத்தில்‌ பதிவு செய்யப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட நபர்‌இ பணியகத்தால்‌ வழங்கப்படும்‌ இலவச உள்ளுர்‌ காப்புறுதியின்‌ பலன்களைப்‌ பெற முடியாது.

TA