01
02
03
04
07
08
09
10
11
12
13
14
15
16
17

இலங்கை திரும்பி வரல்

  

திரும்பி வருதலும்  மீள ஒருங்கிணைதலும்

1.  பின்வரும காரணங்களால் நீங்கள் இலங்கைக்குத் திரும்பிவந்திருந்தால்,விமானநிலையத்திலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் உதவியை நீங்கள் நாடலாம்.

·        சுகவீனம்

·        காயம்

·        துன்புறுத்தல்கள்

·        துஷ்பிரயோகம்

2. உங்கள் தேவைக்கேற்ப பணியகத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்குப் பல்வேறு வகையான சேவைகளை வழங்கலாம்.பின்வருவன உள்ளடங்களாக

·        வீட்டுக்குச் செல்வதற்கான வழிச் செலவு

·        இடைத்தங்கல் இல்லத்தில் உணவு மற்றும் தங்குமிட வசதி.

3.      எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது

·   விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாடகை வாகன வசதிகளை மட்டுமே பாவிக்கவேண்டும்.

· தரகர்கள் / இடைநபர்களிடம் இருந்து எந்த உதவிகளையும் கோர வேண்டாம்.

4. பின்வரும் காரணங்களால் குறிப்பிட்ட ஒப்பந்தக் காலத்துக்கு முன்பே நாடுதிரும்பியிருந்தால் பணியகத்தின் நலன்புரி பிரிவிலிருந்து நீங்கள் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

·        சுகவீனம்

·        விபத்து

·        ஏதாவது அங்கவீனம்

·        உடல் ரீதியான துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல் காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால்

 

உங்கள் ஒப்பந்தக் காலத்தைப் பூர்த்தி செய்து வந்திருப்பின் நீங்கள் தொடர்ந்தும் இங்கு தங்கியிருக்க விரும்பினால் மற்றும் சொந்தமாகத் தொழில் முயற்சி தொடங்க விரும்பினால் விஷேட வட்டிக் கழிவுடன் கூடிய கடன்களைப் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நலன் புரிபிரிவை நாடலாம்.