உங்கள் தொழில் கட்டளைக்காண அனுமதியை எவ்வாறு பெற்றுக் கொள்வது
நீங்கள் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் வைத்துள்ள தகுதியான ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராயின் உங்களுக்கு வெளிநாட்டு முகவர் அல்லது அனுசரணையாளர் ஒருவரிடமிருந்து தொழில் கட்டளையொன்றும் கிடைத்திருக்குமாயின், பின்வரும் நடவடிக்கைகளுக்கு முன்பதாக நீங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதிகள் பிரிவிலிருந்து தேவையான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
· உங்களிடமிருக்கும் வேலைவாய்ப்புக்கள் குறித்து மக்களுக்கு விழிப்பூட்ட அல்லது விளம்பரப்படுத்த முன்.
· வெளிநாட்டில் வேலை செய்வதற்காக ஆட்களைச் சேர்க்கு முன்,
· மேற்சொன்ன நடவடிக்கைகளோடு தொடர்புடைய வேறு செயல்களுக்கு முன்,
முதல் அனுமதியைப் பெற்றுக் கொள்ளல்
அனுமதிப்பிரிவிற்கு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்து நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஆட்களை அனுப்புவதற்குத் தேவையான முதல் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
1. முதல் அனுமதியைக் கோரும் விண்ணப்பக்கடிதம்
2. தொழில் கட்டளை
3. ஆட்சேர்ப்பு உடன்படிக்கை
4. சட்ட அங்கீகாரம்
5. பூர்த்தியாக்கப்பட்ட “F” படிவம்
6. வேண்டப்படும் வேறு ஏதாவது மேலதிகத் தகவல்கள்
ஊடகங்களில் வேலைவாய்ப்பை விளம்பரம் செய்தல்
முதல் அனுமதி கிடைத்த பின் ஊடகங்களில் உங்களின் வேலைவாய்ப்புக்களை விளம்பரம் செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
· அனுமதி கோரிய விண்ணப்பக்கடிதம்
· தொழில் கட்டளை
· விளம்பரத்தின் ஒருபிரதி
முதல் அனுமதியைப் புதுப்பித்தல்
நீங்கள் பெற்றுக் கொள்ளும் முதல் அனுமதி ஒரு வருடம் மட்டும் செல்லுபடியானது. பணியகத்துக்கு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த அனுமதியை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.
· முதல் அனுமதியை புதிப்பிக்கக் கோரும் விண்ணப்பக் கடிதம்.
· புதுப்பிக்கப்பட வேண்டிய காலாவதியான முதல் அனுமதி.
· பூர்த்தி செய்யப்பட்ட “F1” படிவம்.
நீங்கள் மேலும் நினைவில் வைத்திருக்க வேண்டியது
· சகல சம்பிரதாயபூர்வ தேவைகளையும் பூர்த்தி செய்தல்
· வெளிநாட்டு முகவர்களின் கடிதத் தலைப்புக்களை வைத்திருத்தல்
· சம்பந்தப்பட்ட தூதரங்களிடம் இருந்து தேவையான அத்தாட்சிகள்.
Follow us on