இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்பத்திரத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் அனுமதிப்பத்திரத்தை நீங்கள் புதுப்பிக்கலாம்
உங்களின் முதல் அனுமதிப்பத்திரம் காலாவதியாவதற்கு 30 தினங்களுக்கு முன்னர் அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உங்களது அலுவலகத்தின் செயற்திறன் ( நீங்கள் கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு எவ்வித ஆட்சேர்ப்புகளும் செய்யாதவிடத்து அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட மாட்டாது.) உபகரணங்கள், பதிவுகள், அறிக்கைகள், நீடிக்கப்பட்ட வங்கி பிணைப்பத்திரம் ஆகியனவற்றை பரிசோதித்து, அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான அனுமதியை வழங்கும்.
உஙகள் முகவர் நிலையத்தை நீங்கள் வேறு ஒரு இடத்துக்கு மாற்ற விரும்பினால், பணியகத்தின் அனுமதிப்பத்திரப் பிரிவிடமிருந்து அதற்கான அனுமதியை நீங்கள் பெறவேண்டும், இதற்கான விண்ணப்பத்தோடு பின்வரும் ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
· புதிய இடம் பற்றிய விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வர்த்தகப் பதிவு.
கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு எவ்வித ஆட் செய்யப்படாதவிடத்து, அனுமதிப்பத்திரத்தின் செல் காலம் நீக்கப்பட மாட்டாது.
Follow us on