01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17

ஆற்றல் மிக்க மனிதவலு

உலகம் முழுவதும் உள்ள தொழில்தருனர்களும்,ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களும் பிரதானமாக எதிர் நோக்குகின்ற ஒரு பொதுவான பிரச்சினை சிறந்த தொழிலாளர்களையும், ஆற்றல் மிக்கத் தொழிலாளர்களையும் தேடிக் கண்டுபிடிப்பதுதான். இது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகவே உள்ளது.

        எவ்வாறாயினும் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு துறைகளுக்கும் தேவையான பயிற்றப்பட்ட, நம்பத்தகுந்த, கீழ்படிவு மிக்க, சிக்கனமான ஆற்றல் மிக்க மனித வலுவை கட்டியெழுப்புவதில் இலங்கை ஒரு பிரதான மூலமாகத் திகழ்ந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இணைந்த தொழில் தாராளமயமாக்கல் கைத்தொழில் துறை ஆற்றல்களைக் கற்றுக் கொள்ளவும்,விருத்தி செய்து கொள்ளவும் எமது ,இளைஞர்களைப் பெருமளவுக்குத் தூண்டியுள்ளது. கைத்தொழில் போக்கின் உன்னிப்பான அவதானம், நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் பயிற்சி முறைகள் என்பன இலங்கைத் தொழிலாளர்கள் தாம் எதிர் நோக்கும் எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுத்து தாக்குப்பிடிக்கக் கூடியவர்கள் என்பதை உறுதி செய்துள்ளது. இந்தப் பயிற்சி வேலைத்திட்டங்கள் புலம் பெயர்ந்து தொழில் செய்பவர்கள் சாதகமான மனேபாவத்தையும், நடத்தைகளையும் விருத்தி செய்துகொள்ளவம் வழியமைத்துள்ளன. இதந்கு மேலதிகமாக இந்தப் பயிலுனர்களுக்கு பாரிய தொழில் துறைகளில் பயிற்சியளிக்கப்படுகின்றது. வெளிநாடுகளுக்குத் தேவையான உயர்தராதர நிபுணத்துவத்தையும், மிகச் சிறந்த தொழில் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இவ்வாறான இடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

        இலங்கையில் கிடைக்கப்பெறும் மனிதவலு பல்வேறு பிரிவுகளில் தொழில் ஆற்றல்களை உள்ளடக்கியது. பொறியியலாளர்கள், கணக்காளர்கள், கட்டிடக்கலைஞர்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வங்கியாளர்கள், ஹோட்டல்/சிற்றுண்டிச்சாலை நிபுணர்கள், வரவேற்பாளர்கள், தாதிமார், துணை மருத்துவப்பிரிவினர், கணனி செயற்பாட்டாளர்கள், கணிணித்துறை நிபுணர்கள் என இந்தப் பிரிவுகள் விரிவடைந்து செல்கின்றன.

      ஏனைய தரங்கள் இயந்திரங்களை இயக்குபவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், உலோக ஒட்டுனர்கள், பொருத்துனர்கள், மோட்டார் திருத்துனர்கள், கனரக வாகன சாரதிகள், கப்பல் கட்டும் தொழிலாளிகள், தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியலாளர்கள், கப்பல் சிப்பந்திகள், தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் என நீண்டு செல்கின்றது