முறைபாட்டை ஏற்றுக் கொள்ளும் வழிமுறைகள்
சமரச பிரிவு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலுள்ள சமரச பிரிவானது பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்லும் தொழிலாளர்களின் மூலம் சமர்ப்பிக்கப்படும் பணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கையாள்கிறது.
இங்கு,
1. இவை நேரடியாக தொடர்புபட்ட தொழிலாளிக்கு அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது நெருங்கிய உறவினர்கள் மூலம் முன்வைக்க முடியும்.
முறையீடு அல்லது கோரிக்கைகள் முன்வைக்கும் போது அவசியமானவை
• கடவுச்சீட்டு இலக்கம்
• தேசிய அடையாள அட்டை இலக்கம்
2.. முறையீடு அல்லது கோரிக்கை முன்வைக்கப்படும் சந்தர்ப்பம்
• உள்;Nவலைவாய்ப்பு முகவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை அல்லது ஊதியம் பெறாமை.
• தொழில் வழங்குனர் சேவை ஒப்பந்தத்தை மீறுதல்.
• பணியாளர், வேறொரு தரப்பினரின் செயலால் சிரமத்துக்கு ஆளாகுதல் அல்லது அகதியாக்கப்படுதல்.
3.முறையீடு அல்லது கோரிக்கையை முன்வைக்க வேண்டிய இடம்
• இலங்கை வெளிநாட்டு Nவலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயம்.
• மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகம் (இது நீங்கள் பதிவு செய்துள்ள இடத்துக்கமைய அருகில் உள்ள இடத்தை தெரிவு செயதுக் கொள்ளலாம்)
கவனிக்கப்பட வேண்டியவை
பணியகத்தில் பதிவு செய்யப்படாமல் வெளிநாடு சென்ற பணியாளர்களின் புகார்கள் மற்றம் கோரிக்கைகள் பணியகத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதோடு அவை வெளியுறவு அமைச்சின் ஆலோசகர் பிரிவிற்கு முன்வைக்கப்படும்.
Follow us on